மக்களின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் இளம் அரசியல்வாதி
கொழும்பில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்திய பாரிய போராட்டம் ஆளும் தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷவின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டு பதவி விலகுமாறு கோரியிருந்தனர்.
அமைதி வழியில் நடந்த போராட்டம் பின்னிரவில் வன்முறையாக மாறியமை பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. மக்களின் அறவழிப் போராட்டம் எவ்வாறு வன்முறையாக மாறியது என்பது தொடர்பில் பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை திசை திருப்ப சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியிலுள்ள ஒருவர் தனது ஆதரவாளர்களை களமிறங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இளம் அமைச்சரே இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணிலுள்ள உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமக்கான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்குமாறு கோரி, ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் - பொலிஸாருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக சுமார் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதி்ல் பொதுமக்கள், பொலிஸார், ஊடகவியலாளர்களும் அடங்கும்.
இதேவேளை ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற்படையினர் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் தீயணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனங்களும் பொது மக்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு தீ வைக்கப்பட்ட வாகனங்கள் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவினால் அனுப்பி வைக்கப்பட்டவைகள் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாகனத்தில் வந்த படையினர் இறக்கப்பட்டதன் பின்னரே வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்தவர்களை மேற்கோள் காட்டி லங்கா ஈ நியூஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
