சீனாவுக்கும் ஈழத்தமிழருக்குமான உறவை எவ்வாறு கையாளுவது பொருத்தமானதாக அமையும்?

India China Northern Province Tamil Nation Alliance Srilankan Tamils
By Independent Writer Dec 31, 2021 08:07 PM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report
Courtesy: பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

ஈழத்தமிழரின் அரசியல் பரப்பில் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கீய் சென் சொங் வடக்கு விஜயம் அதிக முக்கியத்துவத்தை தந்தமையை கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தது.

அதிலிருந்து ஈழத்தமிழர் -சீன உறவு பற்றிய உரையாடல் பொதுவெளியிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சீனாவை எதிர்க்க முனைகின்ற போக்கினையும் அதன் தலைமை தந்திரோபாயமாக சீனா விடயத்தைக் கையாளும் உரையாடலை வெளியிட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.

அத்தகைய சூழலில் சீனாவைத் தமிழ் தரப்பு எப்படிக் கையாளுவது வாய்ப்பாக அமையும் என்பதைத் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சீனாத் தூதுவரின் வடக்கு விஜயத்தினைப் பற்றிக் குறிப்பிடும் போது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் சமத்துவத்தின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது குறித்து சீனத் தரப்பினர் எதனையும் கூறவில்லை.

வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்த சீனத் தூதுவரும் அவ்வாறான கருத்துக்களைக் கூறவில்லை. போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர். சீனத் தூதுவரின் வடக்குக்கான வருகையை நாம் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

 தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சீனாத் தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் வெளிப்படுத்திய போது சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் தாம் விரும்பவில்லை எனக்குறிப்பிட்டிருந்தார்.

இதே கருத்தினையே அனேக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்த முயலுகின்றனர். அவ்வாறே தமிழ் பரப்பிலும் இந்தியப் பரப்பிலும் உள்ள ஆய்வாளர்கள் உரையாட முனைகின்றனர்.

இத்தகைய உரையாடலுக்குள் தமிழ் தரப்பானது சீனாவை எப்படி அணுகுவதென்பது பிரதான கேள்வியாகும்.முதலாவது சீனா உலக வல்லரசாக எழுச்சியடைந்து வருகிறது.

அரசியலிலும் பொருளாதார இராணுவக் கட்டமைப்பிலும் வலுவான அரசாக விளங்குவதுடன் சந்தை அமைப்பை முதன்மைப்படுத்திக் கொண்டு வர்த்தக ரீதியில் உலகப் பொருளாதாரத்தைத் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துள்ளது.

ஏறக்குறைய அமெரிக்க -ஐரோப்பிய அணிக்கு நிகராக அரசியல் பொருளாதார இராணுவ வளர்ச்சியைச் சீனா எட்டியுள்ளது. சீனா

முதல் வல்லரசாகும் எழுச்சியை அமெரிக்க-ஐரோப்பா-இந்தியக் கூட்டு தடுத்தாலும் அடுத்துவரும் தசாப்தங்களில் சீனா மேற்குலகக் கூட்டுக்குச் சமதையான அரசாக விளங்கும்.

அத்தகைய உலக ஒழுங்கானது இருதுருவ அரசியலாக அமையவே அல்லது பலதுருவ உலக ஒழுங்காகவோ அமைய வாய்ப்புள்ளது. அதில் சீனா ஒரு தரப்பாக விளங்கும் என்பதை வரலாற்றில் தவிர்க்க முடியாது.

அவ்வாறன்றி சீனா தனிவல்லரசாக எழுச்சியடையுமாக இருந்தால் அதற்குள் ஈழத்தமிழர்கள் இயங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

அதே நேரம் சீனா ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமையையோ மனித உரிமையையோ ஜனநாயகத் தன்மை பொருந்திய அரசியல் கட்டமைப்பையோ அல்லது இவை அனைத்தும் ஒன்று திரண்ட ஒரு அரசியல் தீர்வைப் பற்றிய முடிவைத் தரப்போகும் தேசமாக இதுவரை அது காட்டிக் கொள்ளவில்லை.

காரணம் அது ஒரு அரசின் இறைமையை கொண்ட ஆட்சியையோ பின்பற்றி வருகிற நாடு. ஏறக்குறைய 15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசுகளின் இறைமைக் கோட்பாட்டைப் பின்பற்றும் அரசாகச் சீனா விளங்குகிறது.

அதன் பொருளாதார இலக்குக்குள் சந்தையும் வர்த்தகமும் அடிப்படையானது. சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் மூலாதாரமாகப் பொருளாதாரமே காணப்படுகிறது.

சீனா அரசுகளின் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத போக்கினை கடைப்பிடித்து வருகிறது.

மார்க்சிஸமோ அல்லது சோஸலிஸமோ குறிப்பிடும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிரான எந்த அணுகுமுறையையும் சீனா வெளிப்படுத்தாது மட்டுமல்ல ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஆதரவாகச் செயல்பாட்டை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதற்காக ஏனைய வல்லரசு நாடுகள் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன என்று பொருள் கொள்ள முடியாது. ஆனால் சீனாவுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவும் மேற்குலகமும் தனது நலனுக்கு உகந்த வகைக்குள் தேசிய இனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி மனித உரிமை ஜனநாயகம் போன்ற அரசியல் வெளிகளைக் கொண்ட தேசங்களாகவும் அவை காணப்படுகின்றன. 

இரண்டாவது இந்தியா புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் சமகாலத்தில் கொண்டுள்ள நாடாக விளங்குகிறது. இந்து சமுத்திரத்தில் நிலையான இருப்பினை கொள்வது மட்டுமன்றி அமெரிக்க -ஐரோப்பிய அணியுடனான நெருக்கத்தையும் இந்தோ-பசுபிக் உபாயத்தின் பிரதான நாடுகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது.

ஆனால் ஈழத்தமிழரது அரசியலில் அதிக பாதிப்புகளை மேற்கொண்ட தேசமாகவும் முள்ளி வாய்க்கால் துயரத்தைப் பக்கபலமாக நின்று செயல்படுத்திய நாடாகவும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டம் இந்தியாவுக்கு எதிரான செயல்பட்டது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

பரஸ்பரம் இரு தரப்பும் இத்தகைய விவாதத்தில் அதிக இழப்புக்களை எதிர்கொண்டுவருகிறது. ஆனால் இவை அனைத்தும் அரசியலில் வரலாறுகளே. இத்தகைய வரலாற்றிலிருந்து அனுபவங்களை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

காரணம் ஈழத்தமிழர்களும் இலங்கைத் தீவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியமானவையே. ஈழத்தமிழர் இருப்பென்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமானதே. தென் இலங்கை இந்தியாவுக்கு எதிரானதாகவே எப்போதும் செயல்பட்டுவருகிறது.

அவ்வப்போது இந்தியாவுடன் நெருக்கம் எனக் காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் முரண்பாடான உறவையே கொண்டுள்ளது. அந்த வகையில் தென் இலங்கையின் அணுகுமுறை ஒன்றும் தவறானதல்ல. அது தனது இருப்பையும் தேசத்தையும் பாதுகாக்கும் கொள்கையில் இயங்குகிறது. 

மூன்றாவது மேற்குலகச் சூழலும் இந்து சமுத்திரப் பிராந்திய நிலையும் சீனாவுக்கு எதிரான திட்டமிட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன. இலங்கைத் தீவிலிருந்து சீனாவை அகற்றுதல் என்பது மேற்கு உட்பட்ட இந்தியாவின் அணுகுமுறையாக உள்ளது.

அதற்கான கட்டமைப்புகளையும் கூட்டுப்பாதுகாப்பு வழிமுறைகளையும்' இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் ஏற்படுத்தி வருகிறன.

குவாட்-ஒன்று இரண்டு () மற்றும் ஆக்குஷ; () உடன்படிக்கை என்பவை மட்டுமன்றி தற்போது ஐரோப்பிய யூனியன் கட்டமைத்துள்ள உலகளாவிய நுழைவாயில் () சீனாவுக்கு எதிரானவையே.இரண்டாம் உலகப் போருக்கும் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கினை மேற்குலகம் கூட்டுப் பாதுகாப்பினூடாகவே மேற்கெபாண்டு வெற்றி கண்டது.

சோவியத் யூனியனின் தோல்வி அத்தகைய மேற்குலகத்தின் கூட்டுப் பாதுகாப்பிலேயே நிறைவேறியது. சீனாவும் ரஷ்யாவும் மேற்குலக கூட்டுப் போன்றதல்ல. இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு சீனாவை விடப் பலமானது. எனவே மேற்கின் கூட்டுடன் ஒப்பிட முடியாது சீன-ரஷ்யக் கூட்டை.

நான்கு ஈழத்தமிழ் தலைமைகளின் அரசியல் தீர்மானங்கள் சீனாவைப் பூகோள அரசு என்ற அடிப்படையில் அணுகக் கூடியதான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. புவிசார் அரசாக இந்தியாவையும் பூகோள அரசுகளில் ஒன்றாகச் சீனாவையும் ஈழத்தமிழர் நோக்குவது பொருத்தமான நடைமுறையாகும்.

சீனாவை முற்றாக எதிர்ப்பதை விடுத்து அதன் அணுகுமுறையில் ஈழத்தமிழர் தமது நியாயமான கோரிக்கைக்கு இசைவுபடுத்த முயற்சிப்பது அவசியமானது.

கடந்த காலத்தில் அந்நாடு ஈழத்தமிழருக்கு எதிராகத் தென் இலங்கையுடன் இணைந்து மறைமுகமாக இழைத்த துயரத்தைக் கைவிட்டுவிட்டு சமகாலத்தில் ஈழத்தமிழரது கோரிக்கைக்குச் செவிசாய்க்க வைக்க முயலுதல் பொருத்தமானதே.

அத்தகைய முயற்சி சாத்தியமாகிறதோ இல்லையோ முக்கியமல்ல. அத்தகைய வெளியைத் திறப்பது அவசியமானது. அது ஒரு அரசியல் உரையாடல் மட்டுமே. அதற்காக இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றே அல்லது சீனாவிடம் சரணடைய வேண்டும் என்றோ பொருள் கொள்ள வேண்டியதில்லை.

எப்படி சீனாவின் கால்களில் நின்று கொண்டு தென் இலங்கை இந்தியாவை நகர்த்துகிறதோ அதே போன்று இந்தியாவின் அருகில் நின்று கொண்டு சீனாவை நகர்த்துவதே ஈழத்தமிழருக்கான வழிமுறையாகும். 

எனவே ஈழத்தமிழர் சீனா பொறுத்து அச்சமோ அதிருப்தியோ கொள்ள வேண்டியதில்லை. சீனா ஒரு பூகோள அரசு. இந்தியா புவிசார் அரசாகவும் பூகோள அரசாகவும் உள்ளது. அமெரிக்கா ஐரோப்பா பூகோள அரசுகளாகவே நோக்கப்பட வேண்டும்.

இந்தியாவுக்கு ஊடாகவே ஈழத்தமிழர் பூகோள அரசுகளை அணுகுவது ஆரோக்கியமான அரசியலாக அமையும். 1962 இல் தந்தை செல்வா சீன-இந்தியப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக ஈழத்தமிழ் இளைஞர்களைத் திரட்டி போருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. அப்படியான வரலாற்றிலிருந்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.     

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US