செங்கடலில் தொடரும் பதற்றம் : இரு நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
செங்கடல் வழியாக சென்ற லைபீரியா மற்றும் பனாமா நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தொடர் தாக்குதல்
இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

இதன் காரணமாக செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இந்த தாக்குதலை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டதோடு, அவர்கள் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri