செங்கடலில் மீண்டும் பதற்றம்
யேமனின் நிஷ்டுனுக்கு தென்கிழக்கே 96 கடல் மைல் (178 கிமீ) தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் கப்பல் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுதி குழு
பாலஸ்தீனியர்களை ஆதரித்து காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக நவம்பர் மாதம் முதல் செங்கடலில் இஸ்ரேலுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி குழு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் மற்றுமொரு கப்பல் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam