ஏடன் வளைகுடாவில் பதற்றம்: சிங்கப்பூர் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வருகின்ற நிலையிலே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள்
மேலும், குறித்த தாக்குதலில் கப்பலுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை எனவும், யாரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிங்கப்பூர் கப்பல் தாக்குதல் பின்னணியில் தாங்கள் தான் இருப்பதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளதோடு, சிங்கப்பூர் கப்பலான ப்ரோபெல் பார்சுன் தாக்குதலுடன், அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது 37 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
