இலங்கையில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகள்: கிடைத்துள்ள பெருந்தொகை இலாபம்
கடந்த வருடம் நாட்டில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மூலம் இலங்கை நாணய மதிப்பின்படி மொத்தம் 20 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிடைத்துள்ள இலாபம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு டொலருக்கு வீடுகளை விற்பனை செய்ய ஆரம்பிப்போம் என்று கூறினேன்.
தற்போது வீடுகளை டொலர்களுக்கு விற்று 06 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளோம். இது இலங்கை நாணயத்தில் கிட்டத்தட்ட 20 கோடி. இதன் கீழ் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 13 ஆகும்.

சபாநாயகர் அவர்களே டொலர் நெருக்கடி ஏற்பட்ட போது டொலர்களை
தேடிப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு
நல்ல பலன்கள் உள்ளன. இத்திட்டத்தை தொடர பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை நாங்கள் தொடருவோம்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் பன்னிபிட்டிய வீர மாவத்தையில் உள்ள ஜெயந்திபுர வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.
கொழும்பு 13, பொரளை, ஒருகொடவத்தை, பொரலஸ்கமுவ, கொட்டாவ, மாலப்பே ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan