நல்லூர் தேருக்கு சென்றவர்கள் வீட்டிற்கு தீ வைப்பு
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்று(21) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்தநிலையில், வீட்டில் யாருமில்லாத நேரம் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் வரவேற்பறையில் காணப்பட்ட தளபாடங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்து பெரும் புகை வருவதனை அவதானித்த கோயிலுக்கு சென்றவர்கள் அயலவர்களுக்கு இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்தை அறிந்து ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பிய போது பொருட்கள் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
