யாழில் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவரையே இவ்வாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதான நபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள், நான்கு பெட்ரோல் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
மேலும், வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பி சென்ற மற்றொருவர் மூலம் உள்நாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு பணத்தை வழங்கி குறித்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
