யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று(06) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடியுள்ளனர்.
திருட்டு
இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டுள்ளமையை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் பொருத்தியிருந்த சிசிரீவி கமராவில் பரிசோதித்துள்ளனர்.
கமரா பதிவு
கமராவில் பதிவான காட்சியில், வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் , மோட்டார் சைக்கிளில்
இருந்த பெட்ரோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
