அம்பாறையில் இராணுவத்தினரால் பெண் தலைமை குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு
அம்பாறையில் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடு இன்றையதினம் (09.10.2024) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த மே மாதம் இடம்பெற்றது.
கட்டுமான பங்களிப்பு
இதனையடுத்து, குறித்த வீடு, கணவனை இழந்து, 9 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்த பயனாளியான துரைராசா சுரேஜினிக்கு, தமிழ், முஸ்லிம் தனவந்தர்களின் ஒத்துழைப்புடனும் இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடனும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் உள்ளிட்டோர் வீட்டுப் பெறுநருக்கான சாவியும் வீட்டு உபயோகப் பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |