டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல்
டித்வா புயலின் காரணமாக காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை உதவித்தொகைக்கான கால எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டித்வா பேரழிவின் காரணமாக வீடுகளை இழந்தவர்கள், தங்களுக்கான வீடுகள் கட்டப்படும் வரை தற்காலிகமாக மற்றொரு இடத்தில் குடியேறுவதற்காக அரசாங்கத்தினால் மாதம் தோறும் ஒரு தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
மூன்று மாதங்களுக்கு உதவித்தொகை
எனினும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்தொகையானோர் ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் சொந்த வீடுகளுக்குத் திரும்பாமல் தொடர்ந்தும் வாடகை வீடுகளிலேயே வசிக்கும் நிலை காணப்படுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை உதவித்தொகையை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்கள் வரையான கால எல்லைக்கு நீட்டிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் பிரகாரம் மேலும் மூன்று மாதங்களுக்கு குறித்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri