கொழும்பில் உள்ள மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
கொழும்பு மாவட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 காணி உறுதிப்பத்திரங்களையாவது மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.
வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் ஹிமிகம (Himikama) இலவச காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் இன்று காலை காணி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 33 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலம்
இந்த நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லால்காந்த, "சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைச் சிலர் பிடித்து வைத்திருந்தனர்.

சாதாரண மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்குக் காணிகளை வழங்கும் வேலைத்திட்டம் உருவாவதற்கு 71-ஆம் ஆண்டு கிளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்தது.
அரசியல் மற்றும் அரச சேவையில் காணப்பட்ட பலவீனங்களாலேயே மக்களுக்குக் காணிகளை வழங்க முடியாமல் போனது.
மக்களுக்குரிய காணி உரிமைகளை வழங்காமல் அரசாங்கம் வைத்திருப்பது முற்றிலும் தவறானது.
குறைந்தபட்சம் 5,000 காணி உறுதிப்பத்திரங்களையாவது மக்களுக்கு வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிட்டார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam