கொழும்பில் ஜோசப் வாஸ் மன்றத்தினால் நடத்தப்படும் திறந்தவெளி சிலுவைப் பாதை.. LIVE
புதிய இணைப்பு
புனித ஜோசப் வாஸ் மன்றத்தினால் நடத்தப்பட்ட திறந்த வெளி சிலுவைப் பாதையின் நிறைவாக தற்போது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.
புனித லூசியஸ் பேராலயத்தின் வளாகத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் எண்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
மனுக்குலத்தின் பாவங்களைப் போக்க, கடவுள் மனுவுருவெடுத்து சிலுவை மரணம் ஏற்றார்.
இயேசு கிறிஸ்த்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூரும் முகமாக கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தால் 30ஆவது தடவையாக ஒழுங்கு செய்யும் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு புதிய செட்டி வீதியில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த திறந்தவெளி பெரிய சிலுவைப் பாதை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், ஜிந்துப்பிட்டி புனித வேளாங்கண்ணி ஆலயம் வழியாக கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் பேராலயத்தை வந்தடையவுள்ளது.
புனித லூசியஸ் பேராலயத்தின் வளாகத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் எண்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri