வட்டக்கச்சியில் வீடு தீக்கிரை - கத்திக்குத்தில் இறந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தாக்குதல்
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021 அன்று இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்தியால் குத்திய நபரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சென்றநிலையில் இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் போதே பொலிஸார் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் கத்திக் குத்து மேற்கொண்டவரின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.
தீயினை பொலீஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri