கொழும்பில் வீட்டு மாபியாக்களை ஒழிக்க அநுர அரசு அதிரடி! 55 வருடங்களானாலும் முடியாத கனவு
உலகளாவிய ரீதியில் வீடு கொள்வனவு செய்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடத்தில் உள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சுட்டெண்ணிற்கமைய, இந்த தகவல் அண்மையில் வெளியானது.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சொத்து சந்தையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக, பொதுமக்கள் வீடுகளை வாங்குவது கடினமாகிவிட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு
இந்த நிலையில் கொழும்பில் ஒரு சராசரி அடுக்குமாடி குடியிருப்பை வாங்க, ஒரு குடும்பம் தங்கள் முழு வருமானத்தையும் சுமார் 55 ஆண்டுகளுக்கு எந்த செலவும் இல்லாமல் சேமிக்க வேண்டும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த அசாதாரண விலை உயர்வைத் தடுப்பதற்கும், சாதாரண குடிமக்களும் வீட்டு உரிமையாளர்களாவதை உறுதி செய்வதற்கும் புதிய சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் காணி மற்றும் வீட்டு விலைகளில் கட்டுப்பாடற்ற அதிகரிப்புகளைத் தடுக்கவும், இந்தத் துறையில் விலை மாபியாக்களை ஒடுக்கவும் ஒரு புதிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் விலைகள்
காணி அமைச்சு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து இது தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக வீட்டுவசதி மற்றும் கட்டுமாண அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நலன் கருதி, காணி மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் விலைகளைக் கண்காணிப்பதற்கான இந்த புதிய முறைமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam