முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தீடிரென தீப்பற்றி எரிந்த வீடு
முல்லைத்தீவு(Mullaitivu) முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை தெற்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடே இவ்வாற தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தானது இன்று(23.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு
ஓட்டு வீடாக காணப்படும் குறித்த வீட்டின் கூரைப் பகுதியில் தீ பற்றி பரந்து எரியத் தொடங்கியமையினால் வீட்டின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவத்தினை அறிந்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தீயினை கட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன் மின்சார சபையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்த மின்சார சபை ஊழியர்கள் வீட்டிற்கான மின் இணைப்பினையும் துண்டித்துள்ளார்கள்.
இந்த தீ பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த வீட்டு உரிமையாளர்களின் உறவினர் முறையான இளைஞன் ஒருவர் வீட்டின் கூரை ஒடு விழுந்து காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல் - கீதன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri