தமிழர் பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற திருட்டு
மட்டக்களப்பு- வாழைச்சேனை பகுதியில் வீடு ஒன்றின் யன்னலை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யுனியன் கொலனி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் இன்று(08) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
இதன்போது 40பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தாயும் மகனும் இருந்துள்ள நிலையில் வீட்டின் யன்னலை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் பை ஒன்றில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உாிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam
