கிளிநொச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு (Photos)
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் வீடொன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
நகை திருட்டு
இந்த சம்பவம் இன்று (06.10.2022) அதிகாலையளவில் நடந்துள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டுக் கூரையைப் பிரித்து வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுன் பெறுமதி மிக்க தங்க நகைகளும் 49500 பணமும் திருடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
அத்துடன் பெறுமதிமிக்க இரண்டு தொலைபோசிகள் மற்றும் உரிமையாளரின் பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளும் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸார் தருமபுர பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan