இலங்கையில் வீட்டுக் காவல் சட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம்
இலங்கையில் வீட்டுக் காவல் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நா்டிடன் சிறைகளில் நிலவி வரும் நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்டமசோதாவை தயாரித்து வருகிறது என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கைதிகளை தடுத்து வைக்கும் சிறை
நாட்டின் சிறைகள் சுமார் 10,500 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தாலும், தற்போது அவற்றில் சுமார் 39,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் முக்கிய பிரச்சினை, குற்றம் நிரூபிக்கப்படாமல் விளக்க மறியலில் உள்ள கைதிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதுதான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது சுமார் 28,000 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 20,000 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய சட்டம், நீதியரசர் யசந்த கோதாகொட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படுவதாகவும், பொருத்தமான வழக்குகளில் சந்தேகநபர்களை சிறையில் அடைக்காமல் வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறைகளில் காணப்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைக்க தற்போது ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்டகால தண்டனை கைதிகளுக்கான தண்டனை குறைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தும் சாத்தியங்களை ஆய்வு செய்ய, நீதியரசர் துரைராஜா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதிமன்றங்களில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசரின் காலத்தில் வழக்குகள் தீர்க்கப்படும் விகிதம் உயர்ந்துள்ளதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் லஞ்ச வழக்குகள் உள்ளிட்ட விசேட வழக்குகளுக்காக புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் மேலும், ஏழு புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam