விடுதி சுற்றிவளைப்பு: வெளிநாட்டு பெண்கள் ஐவர் கைது
கல்கிஸ்சை - சேரம் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், அதன் முகாமையாளருடன் 5 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை - வலானை மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் 51, 35, 31 மற்றும் 28 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதியின் முகாமையாளர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கைது செய்யப்பட்ட பெண்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளனர்.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
