யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து: விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம்
யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ உணவகத்தில் “DJ night” எனும் பெயரில் இடம்பெற்ற
போதை விருந்து கொண்டாட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என உணவக முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.
ரில்கோ கோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர், த.திலகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விளக்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ உணவகத்தில் “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றதுடன் அங்கு வந்த சிலர் தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
சிங்கள மக்களையும் சிங்கள ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்த றீ(ச்)ஷா: இயக்கச்சியில் வியக்கவைக்கும் முயற்சி (Video)
பொலிஸாரின் மேற்பார்வை
நிகழ்வு நடந்து முடியும் வரை மாநகரசபை பிரதிநிதிகள் மேற்படி நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்து உணவகத்திற்கு வெளியே 06 பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
எமது நிறுவனம் சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்டது.
நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |