வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (14.08.2026) பகல் நேரத்தில் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்க
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri