வீடு கட்டித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி : பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்
சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
you may like this video
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan