வெப்பமான காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாளைய தினத்திற்கான (05) வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம்
அதன்படி நாளைய தினம் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "அதிக அவதானம்" செலுத்தப்பட வேண்டிய நிலையில் காணப்படக்கூடும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் வெப்பநிலை கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
