பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்
மத்திய பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள லெய்ட் மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது, நேற்று (03.04.2024) மாலை 6.16 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் பல அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வுகள்
பிலிப்பைன்ஸின் கடலோர நகரமான துலாக்கில் இருந்து தென்கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதுடன் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan