கிழக்கு மாகாணத்தில் தொடரும் உஷ்ணமான காலநிலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் உஷ்ணமான காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நகரில் முக்கிய தேவைகளுக்காக வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிக உஷ்ணம் காரணமாக வயோதிபர்கள் நோயாளிகள் பெண்கள் சிறுவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மர நிழல்களில் ஒதுங்கி இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
விளைச்சல் பாதிப்பு
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய பொதுமக்கள் நண்பகல் வேலைகளில் வெளியில் நடமாட வேண்டாமென தெரிவித்திருந்த போதும் அதிகமான மக்கள் நகரில் தங்களது தேவைகள் நிமித்தம் வருகை தந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
தற்போது மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலையினால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை, மாவட்டத்தில் பயன்தரும் வாழை, மா மற்றும் தெங்கு பயிர்ச்செய்கையும் அதிக உஷ்ணம் காரணமாக பாதிப்படைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னை மரங்களின் இலைகள் கருகுவதுடன் அதன் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தேங்காயின் விலைகளும் அதிகரித்து உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam