மருத்துவமனைகளின் மருந்து துண்டுகளுக்கான மருந்துகளை, “அரச ஒசுசல”வில் இலவசமாக பெறலாம் என்று அறிவிப்பு!
இலங்கையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பின் காரணமாக, மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து துண்டுகளுக்கான மருந்துகளை “அரச ஒசுசல”வில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதார அமைச்சருடன் அவர்கள் பேச்சு நடத்தியபோதும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பணிப்புறக்கணிப்புக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தடையுத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பெப்ரவரி 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களின் அசௌகரிங்களை கருத்திற்கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தமையை அடுத்தே இந்த உத்தரவு, அரச தாதியர் சம்மேளனம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது.



