வைத்திய கலாநிதி பாதெனிய வீட்டில் விருந்துபசாரம்!தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள்
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் அனுருத்த பாதெனியவை தனிமைப்படுத்துவதற்காக பொது சுகாதார அதிகாரிகள் முயற்சித்த போதும் அவர்களால் பாதெனியவை கண்டறிய முடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அநுருத்த பாதெனிய களனியில் உள்ள தமது வீட்டில் நடத்திய விருந்துபசாரத்தில் பங்கேற்ற வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்தே பாதெனியை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி இரண்டு தடவைகளாக பாதெனியவின் இல்லத்துக்கு சென்ற போதும் அவர்களால் பாதெனியை காணமுடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இந்த விடயம் களனி சுகாதார மருத்துவ அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வைத்திய கலாநிதி பாதெனிய கடந்த ஜனவரி 8ஆம் திகதியன்று தமது வீட்டில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில் 3 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வரை பங்கேற்றனர்.இந்த நிலையில் விருந்துபசாரத்தில் பங்கேற்ற மினுவாங்கொடையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவிசாவளை வைத்தியசாலையில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்தே குறித்த விருந்துசாரத்தில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்துமாறு மினுவாங்கொட சுகாதார மருத்துவ அதிகாரி பொது சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.