வைத்தியசாலை கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எச்சரிக்கை
நாட்டின் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மருத்துவர்கள் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறினால் அது ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பினையும் பாதிக்கும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் சுமார் இரண்டாயிரம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மருத்துவர்களை தக்க வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவு, மேலதிக வேலை நேரம் போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியிடுவதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட் சுற்று நிருபத்தை வெளியிடப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்று நிருபம் வெளியிடுவதற்கு காலம் தாழ்த்தப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam