போதைப் பொருளை பயன்படுத்தும் வைத்தியசாலை ஊழியர்கள்-மருத்துவர் ருக்ஷான் பெல்லன
அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றுழியர்கள் கடமை நேரத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருளை பயன்படுத்துவதாகவும் அது பாரதூரமான பிரச்சினை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன நேற்று தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுடன் தொழிற்சங்க தலைவர்களுக்கு தொடர்பு
தொழிற்சங்க தலைவர்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் தொடர்புள்ளது. இதற்கு முன்னர் நான் இது பற்றி கூறிய போது, அவர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த தகவலை வெளியிட்ட பின்னர் இரண்டு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை முன்வைத்தன. தொழிற்சங்க போராட்டஙகளில் ஈடுபடும் முன்னணி உறுப்பினர்கள் வைத்தியசாலைகளில் போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் என தெரியவருகிறது.
நோயாளிகளின் பொருட்களை கொள்ளையிடும் ஊழியர்கள்
அதற்கான சாட்சியங்களும் இருக்கின்றது. போதைப் பொருளை கொள்வனவு செய்ய தினமும் ஊழியர்களுக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுகிறது.
அந்த பணத்தை தேடிக்கொள்வதற்காக நோயாளிகளின் பொருட்களை கொள்ளையிடுவதை ஊழியர்கள் பழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக நோயாளிகள் கடும் சிரமங்களையும் பாதுகாப்பற்ற நிலைமையையும் எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் ருக்ஷான் பெல்லன மேலும் கூறியுள்ளார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
