அரச வைத்தியசாலையில் பறிபோன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன்

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan protests Sri Lankan Peoples Protest
By Kiyas Shafe Jul 21, 2026 11:18 AM GMT
Report

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் போராட்டம் ஒன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(21.07.202) காலை 11 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

தீவிரமடையும் டெங்குத் தொற்று! பெற்றோருக்கு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு

தீவிரமடையும் டெங்குத் தொற்று! பெற்றோருக்கு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு

வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம்

சிகிச்சைக்காகத் தனது தாயாரை அழைத்து வந்த நபர் ஒருவரிடம், அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உடலை உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்ல அந்நபர் முற்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலையில் பறிபோன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன் | Hospital Management And Staff Protest In Kinniya

இதன்போது, அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே உடலைக் கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று நண்பகல் 1 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரச வைத்தியசாலையில் பறிபோன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன் | Hospital Management And Staff Protest In Kinniya

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில், வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர்கள் மீதான நடவடிக்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியிலேயே பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் சேவையாற்றி வருகிறோம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், சேவையில் ஈடுபடுவதில் தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரச வைத்தியசாலையில் பறிபோன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன் | Hospital Management And Staff Protest In Kinniya

எனவே, எமக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக, வைத்தியசாலை வளாகத்தினுள் பொலிஸ் பாதுகாப்புச் சாவடி ஒன்றினை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் "நிறுத்து நிறுத்து... ஊழியர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!", "வேண்டும் வேண்டும்... வைத்திய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!" போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அரச வைத்தியசாலையில் பறிபோன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன் | Hospital Management And Staff Protest In Kinniya

அரச வைத்தியசாலையில் பறிபோன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன் | Hospital Management And Staff Protest In Kinniya

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு



3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US