நுவரெலியாவில் குதிரை ஓட்டப் போட்டி
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய நுவரெலியாவில் குதிரை ஓட்டப் போட்டி இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற இந்த ஓட்டப் போட்டியில் நான்கு சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் அசரங்க மற்றும் பிரபா ஜெயரத்தின ஆகிய குதிரை பந்தய உரிமையாளர்களின் சார்பாகப் போட்டியில் பங்குபற்றியிருந்த குதிரை ஓட்ட வீரர் பி.விக்ரமன் என்பவர் வெற்றி பெற்றார்.
மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று குதிரை ஓட்டப் போட்டியில் எல்.ரவிக்குமார் மற்றும் பி. எஸ் கவிராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்விரு போட்டியாளர்களும் எட்வர்ட் என்பவரின் குதிரைப் பந்தயத்தின் உரிமையாளர் சார்பாகப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
