பிரசன்ன ரணதுங்கவுக்கு பிரதமராகும் யோகம் ஜாதகத்தில் உள்ளதா? பிரியங்கர ஜயரத்ன கூறும் விடயம்
கட்டுநாயக்கவின் புதிய பி.சி.ஆர் பரிசோதனை நிலையம் ஒன்றை நிர்மாணித்து அடுத்த பிரதமராகப் பதவிக்கு வர முயற்சிக்கின்றீர்களா என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன (Piyankara Jayaratne), சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் (Prasanna Ranatunga) கேட்டுள்ளார்.
எனினும் தனக்கு அப்படியான எதிர்பார்ப்பு எதுவுமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
எனினும் ஜாதகத்தில் அப்படியான யோகம் இருக்கின்றது தானே என பிரியங்கர ஜயரத்ன கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள பிரசன்ன, தான் ஜாதகத்தை நம்புவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நிலையம் அமைப்பது தொடர்பாகத் தொழில் அமைச்சில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் இருவரும் இவ்வாறு உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri