திடீரென கழன்று சென்ற முச்சக்கர வண்டி சக்கரம்! சாரதிக்கு நேர்ந்த விபரீதம்
ஹொரண - பாதுக்கை பிரதான வீதியின் ஜயந்தி மாவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரண பகுதியிலிருந்து பாதுக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னாலுள்ள சக்கரம் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென கழன்றுள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்
பொலிஸார் விசாரணை
இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, எதிரே வந்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாகப் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் ஹத்தரலியத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம் Cineulagam
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri