கார்க் தீவு வழியாக ஹார்முஸை கைப்பற்றும் அமெரிக்கா!

Donald Trump Iran Iran-Israel War Strait of Hormuz
By Kanthan Mar 21, 2026 02:27 AM GMT
Report

மத்தியக் கிழக்கு போர் சூழலில் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்படும் தாக்குதலில் பல நாடுகளில் எரிபொருள் பிரச்சினை உக்கிரமடையும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது போர் நடவடிக்கைகளில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லக் கூடும்.

ஜனாதிபதி ட்ரம்ப் சொல்வதொன்று செய்வதொன்று.திட்டங்களை திடீரென மாற்றக் கூடியவர்.வரி விதிப்பிலும் அவ்வாறே நடந்து கொண்டார்.

ட்ரம்ப் தனது போர் திட்டங்களை இன்னும் கைவிடவில்லை. அடுத்த நடவடிக்கையாக ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றுவதே திட்டமாக இருக்கும். ஆனால் அது கடும் கஷ்டமானதாக இருக்கும்.

மத்திய கிழக்கு போர்ப்பதற்றம் : ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மத்திய கிழக்கு போர்ப்பதற்றம் : ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

கார்க் தீவை கைப்பற்றும் திட்டம்

இந்த திட்டத்தில் முதலில் கார்க் தீவை iran kharg island கைப்பற்றுவதாகவும். அது இலேசான விடயமாகும். அதாவது விமானங்களை பயன்படுத்தி மேலிருந்து குண்டுகளை போட்டு கைப்பற்றலாம்.

ஏற்கனவே அங்கிருக்கும் இராணுவத் தளங்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார்க் தீவு பாரசீக குடாவின்  மேலே இருக்கிறது. தீவை கைப்பற்றி கடற் படைகளை கரையோர வழியில் அமர்த்தி ஹார்முஸ் நோக்கி நகர்த்த கூடும்.

ஆனால் கார்க் தீவின் கடற்கரைகள் மலைப்பகுதியை கொண்டதாகும்.அதனால் போர் நிபுணர்களின் கணிப்பீட்டின் படி ஈரானில் பத்து இலட்சம் வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கார்க் தீவு வழியாக ஹார்முஸை கைப்பற்றும் அமெரிக்கா! | Hormuz Iran Kharg Island Oil Us Navy Force

ஐஆர்ஜிசி படைகள் குறித்த மலைப் பகுதிகளில் இருந்து தாக்குதல் நடத்தினால் அதை தாக்குப் பிடிக்க முடியுமா என கூறமுடியாது.

அதிக காலமும் பாரிய செலவையும் ஏற்படுத்தும்.ஆனால் அமெரிக்க படைகளின் பாரிய டேன்கர்கள் மற்றும் போர் கப்பல்களை ஹார்முஸ் வழியோ தான் கொண்டு செல்ல வேண்டும்.

ஹார்முஸ் பகுதி 35 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடற் பகுதியாகும். ஆதில் ஆழமான கடல் பகுதி அதாவது கப்பல் செல்லக் கூடியது ஆறு கிலோ மீட்டர் கொண்ட கால்வாய் பகுதியாகும். 

ஹார்முஸ் நீரிணையில் மறைந்திருக்கும் மர்மங்கள்

இதில் தான் கப்பல்கள் போவதும் வருவதும் நடக்கிறது.யுத்தத்தின் போது ஒரு தரப்பின் பௌதீக வளம் குறுகியதாக இருந்தால் பாதிப்பும் அதிகமாகும்.

அத்தோடு ஹார்முஸ் நீரிணையில் காணப்படும் வலைவு பகுதியில் பாரிய டேங்கர்கள் மற்றும் கப்பல்களை ஒரேயடியாக திருப்ப முடியாது. யூ டேனில் மெதுவாகத்தான் திருப்ப வேண்டும்.

அதற்கு காலம் எடுக்கும்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிர் தாக்குதல் நடத்துவது இலகுவான காரியமாகும். அந்த பகுதியில் ஈரான் கடல் கண்ணி வெடிகளை விதைத்துள்ளது.

அவற்றை அகற்றி கொண்டே செல்ல வேண்டும். அதற்கு மயின்ஸ் சிலிப்பர்கள் அதாவது கடல் கண்ணி வெடிகளை அகற்றும் கப்பல்களாகும்.

அவற்றை கொண்டே ஹார்முஸ் வழியே கார்க் தீவுக்கு செல்ல வேண்டியியுள்ளது. ஆனால் அமெரிக்க கடற்படையினரும் சில எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனார்.

ஆனால் கடற்படை தளபதி ஒருவரின் சொன்ன கருத்து ‘இது எங்களின் திட்டம் இல்லை மேலிடத்தின் ஆணையாகும்’.

கார்க் தீவு வழியாக ஹார்முஸை கைப்பற்றும் அமெரிக்கா! | Hormuz Iran Kharg Island Oil Us Navy Force

ஈரானுக்கு தரை வழியாக செல்ல வேண்டும் என்றால் ஈராக் பக்கம் இருந்து அல்லது துருக்கி பக்கமாக தான் செல்ல வேண்டும்.

அங்கேதான் கெக்கேசியன் மலைத் தொடர் அமைந்துள்ளது.அதிலிருந்து ஈரான் தாக்குதல் நடத்தலாம். சில நேரம் கார்ஜ் தீவை ட்ரம்ப் கைப்பற்றிக் கொள்ளக் கூடும்.இதில் தான் ஈரானின் 90 சதவீதம் எண்ணெய் வளம் இருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு பார்த்தால் ஈரான் வைத்திருக்கும் குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை.

அவர்களிடம் பாரியளவு ஏவுகணைகள் இருக்கிறது.அதை இன்னும் ஈரான் பாவிக்கவில்லை.அதனால் நினைக்கும் அளவுக்கு சாத்தியமானதல்ல என்பது அமெரிக்க படைகளும் அறிவர். 

மத்திய கிழக்கில் ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் படைகள் களத்தில்....

மத்திய கிழக்கில் ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் படைகள் களத்தில்....

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US