விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம்: வைகோ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் உள்ளதாகவும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
சென்னை - எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் விழா இன்றைய தினம் (26.11.2023) கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பழ நெடுமாறன் உள்ளிட்டோர் பொய் சொல்லவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
பழ நெடுமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள். அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது.
பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
