ஊடகவியலாளர் ச.தவசீலனுக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிப்பு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடக களப்பணி ஆற்றிவரும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பண்டாரவன்னியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்றைய தினம் (13.12.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்தவர்களுக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோயன் ஜெயராணியின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னாள் செயலாளருமான நாகலிங்கம் வேதநாயகனும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரனும் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதேவேளை கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் ஆகியோர் கலந்துள்ளனர்.





செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
