புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவிக்கு கௌரவிப்பு!
யா/வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையில் கல்வி கற்று, புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 140 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த ஜெயரஞ்சன் அஸ்வினிக்கான கௌரவிப்பு இன்றையதினம்(11) நடைபெற்றது.
இதன்போது, புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் நிருசன் புஷ்பராஜா என்பவரால் இருபத்தையாயிரம் ரூபா பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டதுடன், புவனேஸ்வரன் யசிந்தாவின் நினைவாக மாணவிக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மாணவியின் தந்தையான தியாகராஜா ஜெயரஞ்சன் என்பவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
கௌரவிப்பு
இதனால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியிலும் விடாமுயற்சியுடன் கல்வி பயின்று மாணவி இவ்வாறு சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார்.
பாடசாலை அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா இலங்கேஷ்வரன், பழைய மாணவர் சங்க செயலாளர் மா.நாகரட்ணம், அபிவிருத்தி சங்க உறுப்பினர் தி.விஜயரஞ்சன், ஆசிரியர்கள், மாணவர்கள், குறித்த மாணவியின் தாயார் ஆகியோர் கலந்துகொண்டனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
