புலம்பெயர் தமிழர்களில் ஒரு பிரிவினரை கடுமையாக விமர்சித்த ஈ.பி.டி.பி
புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (24.11.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“விமர்சனங்களுக்கு அப்பால், கடந்த காலத்தில் ஆயுத வழிமுறையில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த தரப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
நினைவுகூர அனுமதி
குறித்த தரப்பு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும் அந்த அமைப்பு சார்பாக உயிரழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவுகூர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழலில் ரில்வின் சில்வாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதை அறிவுசார்ந்து சிந்திக்கின்ற யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தற்போதைய சூழலில் இவ்வாறான செற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கோமா நிலையில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |