பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கு வழங்கப்படவுள்ள கௌரவம்
பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் இலங்கை பிரஜையான பிரியந்த தியவதன ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவரது நண்பரை கௌரவிக்க உள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
پوری قوم کی جانب سے میں ملک عدنان کی بہادری اور اخلاقی جرات کو سلام پیش کرنا چاہتا ہوں کہ جنہوں نے سیالکوٹ میں اپنی جان خطرے میں ڈالتے ہوئے پریانتھا دیاوادنا کو پناہ دینے اور خود کو ڈھال بنا کر انہیں جنونی جتھے سے بچانے کی پوری کوشش کی۔ ہم انہیں تمغۂ شجاعت سے نوازیں گے۔
— Imran Khan (@ImranKhanPTI) December 5, 2021
பிரியந்தவை வன்முறை கும்பலிடமிருந்து காப்பாற்ற முயன்ற, அவருக்கு பாதுகாப்பளிக்க முயன்ற அவரது நண்பர் மலிக் அடானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலிற்கு தேசத்தின் சார்பில் நான் தலைவணங்குகின்றேன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பிரியந்தவை காப்பாற்ற பல வழிகளில் தனது உயிரையும் பணயம் வைத்து போராடியமைக்காக அடானைதம்ஹா சுஜாட் விருதினை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்.....
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் : மற்றும் பல தகவல்கள் வெளியாகின
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! குற்றவாளிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வம்சாவளி குடும்பம் News Lankasri
