நெருக்கடி நிலையில் 5 பிள்ளைகளுடன் வாழும் நபரின் நேர்மையான செயல்
மாத்தறை நகரத்தில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரின் நேர்மையான செயலை பலரும் பாராட்டியுள்னர்.
மாத்தறையில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ரமீஸ் என்பவர் வங்கியில் பணம் வைப்பு செய்வதற்காக சென்ற போது வாகனம் நிறுத்துமிடத்தில் சிறிய பை ஒன்று விழுந்து கிடப்பதனை அவதானித்துள்ளார். அதனை திறந்து பார்த்த போது அதில் தங்க நகைகள் சிலவற்றை அவதானித்துள்ளார்.
நேர்மையான செயல்
உடனடியாக வங்கியின் பாதுப்பு அதிகாரியை அழைத்து யாராவது இதனை தேடி வந்தால் கொடுத்துவிடுமாறு ரமீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, அடுத்த நாள் இளைஞன் ஒருவர் தங்கத்துடனான பையை தொலைத்துவிட்டதாக கூறி இளைஞன் ஒருவர் வங்கிக்கு வருகை தந்துள்ளார்.
அதன் பின்னர் அடையாளத்தை உறுதி செய்த வங்கி முகாமையாளர், தங்க நகையை உரிமையாளரிடம் அதனை ஒப்படைத்துள்ளார்.
பலரும் பாராட்டு
அத்துடன் ரமீஸ் மீண்டும் வங்கிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரை வங்கி முகாமையாளர், தங்கத்தின் உரிமையாளர் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர்.
தொலைத்த இடம் கூட தெரியாமல் தேடிக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் அதனை பெற்றுள்ளார்.
5 பிள்ளைகளுடன் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதே கடினமாக கருதும் அந்த நபரின் நேர்மைக்கு தங்கத்தை தொலைத்தவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
