ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றின் முக்கிய ஆவணங்களுக்கு விசமிகளால் தீ வைப்பு!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஹொன்சி தமிழ் மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த சிலரால், பாடசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(24.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து அலுமாரிகளின் கதவுகளையும் உடைத்துள்ள சந்தேகநபர்கள், அவற்றுக்குள் இருந்த ஆவணங்களை வெளியே எடுத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
நேற்று பிற்பகல் பாடசாலை மண்டபத்திலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதைக் கவனித்த அதிபர், உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் பாடசாலை ஆவணங்கள் பெருமளவில் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri