வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம்! - வலியுறுத்தியுள்ள அருட்தந்தை
வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் போது திருகோணமலையில் வைத்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மக்களின் பேராதரவை கோரி நிற்கின்றோம்.
இப்போராட்டம் வரலாற்று பெரும் தலைநகரத்தை அடைந்த நிலையில் தமிழீழத்தின் கூட்டு அரசியல் கோரிக்கைகளையும், அடையாளத்தையும், இருப்பையும் மீண்டும் இந்த பேரணி வலியுறுத்துகின்ற நிலையில் வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்றுகின்ற அரச செயற்திட்டங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தி தமிழர் தேசத்தை சிதைக்கின்ற நிலையில் சர்வதேசம் மௌனம் காப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் இருப்பும் இவ்வாறான எழுச்சிகளின் ஊடாக மீள் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்று கருத்து இல்லை. சிங்கள அரசு தமிழ் தேசத்தை சிதைப்பதற்கு கங்கனம் கட்டிக் கொண்டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் இலங்கை அரசு மறுத்து வருகிறது. மலையக மக்களின் உரிமைகளையும் காலம் காலமாக மறுத்து வருகின்றமை வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பல்லினங்களுக்கு உரிய நாடு என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துவதோடு, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம் என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
திருகோணமலை கீழ் சமூக ஒன்றியத்தின் சார்பாக மக்களை அணிதிரண்டு பங்கேற்குமாறு கேட்டுக் கொள்வதோடு இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற கோரிக்கைகளை மீண்டும் ஆணித்தனமாக முன்வைப்பதோடு, இப்பேரணியை கட்சி நலன்களுக்காகவும், அரசியல் நடவடிக்கைகளுக்காகவும், தனி மனித நலனுக்காகவும் பயன்படுத்தக் கூடாது என வினயமாக வேண்டி நிற்கின்றோம்.
தமிழினம் வரலாற்றில் காலம் காலமாக எட்டப்பர்களை கண்டு வந்துள்ளது. நேற்று (நேற்றுமுன்தினம் (நான்காம் திகதி)) அரசியல் கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இப்போராட்டத்தை திசை திருப்பும் விதமாக நடந்து கொண்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இப்போராட்டத்தின் உன்னத தன்மையை மதித்து இதற்கு வலு சேர்க்குமாறு எல்லோரையும் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
