பிரித்தானியாவில் குடியுரிமை விற்பனை : உள்துறை அலுவலகத்தில் மோசடி அம்பலம்
பிரித்தானியாவில் வதிவிட உரிமத்தை விற்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் உள்துறை அலுவலக வழக்குப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு 2000 பவுண்டுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.
குறித்த பணியாளர் புகலிடக் கோரிக்கையாளரைத் தொடர்புகொண்டு தனது அகதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 2,000 பவுண்ட் கேட்டுள்ளார்.
பணியாளர் இடைநிறுத்தம்
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூத்த பணியாளர் அந்த நபரைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் மோசடி முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியமான உள்துறை அலுவலகப் பதிவுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் பணியாளர் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
