வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு
வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையர்கள் திருடிச் சென்றதுடன், வீட்டில் நின்ற பெண் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் வேலைக்காக வெளியில் சென்றிருந்ததுடன், ஒரு பிள்ளை
பாடசாலைக்கும், மற்றைய பிள்ளை உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்தனர்
உறவினர் வீட்டிற்குச் சென்ற பெண் பகல் 11 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து அறை ஒன்றுக்குள் சென்ற, சிறிது நேரத்தில் வீடு புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த அலமாரி, சாமி அறை மற்றும் ஏனைய பகுதிகளில் சோதனை செய்ததுடன், குறித்த பெண் அறையிலிருந்து வெளியில் வந்த போது அந்த பெண் மீது கதவு சட்டத்தினால் தாக்கிவிட்டு அப்பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றையும் அறுத்துச் சென்றுள்ளனர். இதன்போது 2 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண்ணை அயலவர்கள் அழைத்ததுடன், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியப்படுத்தினார்கள். இது தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா, உக்குளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
