மகளின் அழகு நிலைய திறப்பு விழாவில் தாய்க்கு நேர்ந்த சோகம்
மகளின் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு சென்ற தாய் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலை பகுதியினை சேர்ந்த (78) வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம நகரில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தனது மகள் அழகு நிலையம் ஒன்றை திறக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், முதலாவது மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்வதற்காக கட்டப்பட்ட படிக்கட்டுகளில் இறங்கpய போது தவறி விழுந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம்
இதனையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் ஹோமாகம பிரதம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமாரவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், உயரத்தில் இருந்து விழுந்ததில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
