உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரும் பொறுப்பின்றி செயற்படும் நாட்டு மக்கள்!
இலங்கை மக்கள் அனைவரும் தற்போது படையெடுக்ககும் ஒரு ஸ்தலமாக சிவனொளிபாத மலை மாறியுள்ளது.
சீரற்ற காலநிலையால் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
எனவே மக்களை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலை
இதேவேளை முககவசம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய சீரற்ற காலநிலையில் மக்கள் சிவனொளிபாத மலைக்கு செல்வது பாதுகாப்பற்ற செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
இதேவேளை சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வயோதிபர் ஒருவர் கடும் குளிர் காரணமாக கடந்த வியாழக்கிழமை மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாத மலையில் கடும் குளிர் காரணமாக ஒருவர் மரணம் |
இதேவேளை மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நாட்டின் பல பாகங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்ப பிரதேசங்களிலும் கடும் குளிரான ஓர் காலநிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு சீரற்ற காலநிலையால் பல்வேறு இழப்புக்கள் இடம்பெறும் போது மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியமான விடயமாகும்.
எனவே மக்கள் பாதுகாப்புடன் தமது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் சிவனொளிபாத மலைக்கு மக்கள் யாத்திரை செல்வார்கள்.
எந்தவித இன,மத பேதமுமின்றி அனைத்து மக்களும் யாத்திரை செல்வது வழமையான ஒரு விடயமாகும்.
கோவிட் தொற்று
இருப்பினும் கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று காரணமாக மக்கள் இவ்வாறான யாத்திரைகளில் ஈடுபடுவது குறைந்திருந்தது.
இந்நிலையில் நாட்டில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் சுகாதாரக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கோவிட் பரவல் குறைவடைந்துள்ளமையால் மீண்டும் மக்களின் பயணங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கமைய இவ்வருடத்திற்கான சிவனொளிபாத யாத்திரை காலம் புதன்கிழமை ஆரம்பமானதையடுத்து மலை ஏறுவதற்கு பெருமளவிலான மக்கள் ஹட்டனை வந்தடைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையையும் மீறி, நாடு முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் தொடருந்துகளில் வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சிவனொளிபாத மலை யாத்ரீகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை |




