சிவனொளிபாத மலை யாத்ரீகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்வோரை கைது செய்ய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இந்த சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
போதைப்பொருளுடன் மூவர் கைது

போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை ஹட்டன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இந்த நபர்கள் கஞ்சா மற்றும் சட்டவிரோத புகையிலை உற்பத்திகளை தம்வசம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பில் 20 முதல் 30 வயது வரையிலான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 பேர் கைது
போதைப்பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலை தரிசிக்க சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் முகமாக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (09.12.2022) ஹட்டன் கோட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித த சில்வாவின் ஆலோசனைக்கமைய கோட்ட புலனாய்வு பிரிவின் பிரதான பரிசோதகர் தலைமையில் ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் 1318 என்ற மோப்ப நாயினை பயன்படுத்தி கினகத்தேனை - தியகல பகுதியில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வாகனங்களில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கேரள கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நுவரெலியா பிரதேசத்திற்கும் சிவனொளிபாத மலை யாத்திரை செய்வதற்காக வந்தவர்கள் என்றும், இவர்கள் குருணாகல், கம்பஹா, வரக்காபொல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri