இலங்கை வந்து சென்ற அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி!
அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது தனி விமானத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற நிலையில், இம்மாதம் 19ம் திகதி அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
எரிபொருள் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்காக அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானமான Bombardier Express Global இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விமானத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் Care Aviation Pvt. Ltd நிறுவனம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் சுமார் 7,000 லிட்டர் எரிபொருள் நிரப்பிய பிறகு, புதிய பணியாளர்களுடன் விமானம் இங்கிலாந்துக்கு புறப்பட்டதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.