மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தற்கொலை செய்து கொண்டார் என்று வரலாற்றை மாற்றிவிடுவார்கள்!

Memorial
By Independent Writer Dec 26, 2020 03:43 AM GMT
Report

2005ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனையின் போது ஜோசப் ஐயா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று எதிர்காலத்தில் வரலாறுகளை மாற்றிவிடுவார்களோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற திருப்பலி ஆராதானையின் போது 2005ம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.

படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலி முன்னணியின் ஏற்பாட்டில், அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா உயிர் நீத்த 15வது ஆண்டு நினைவுமட்டக்களப்பில் ஆளுமை மிக்க தலைவரை இழந்து வேதனையான நினைவு நிகழ்வில் நிற்கின்றோம்

யாழ்பாணத்தில் 1934 நவம்பர் 26ம் திகதி பிறந்த ஜோசப் பரராஜசிங்கம் ஐயா கிழக்கு மாகாணத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்து மட்டு மண்ணில் நாடாளுமன்ற உறுப்பினராக வாழ்ந்ததுடன் வடக்கு கிழக்கிற்கு இணைப்பு பாலமாகவும் திகழ்ந்தார்.

கடந்த 2005ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனையின் போது ஜோசப் ஐயா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக ஊடகங்களில் சில கருத்துக்களை காணக்கிடைத்தது.

வருங்காலத்தில் வரலாற்றை மாற்றி விடுவார்களோ என ஐயம் ஏற்படுகின்றது. 2005 இவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து சந்தேகத்தின் பெயரில் பலரை கைது செய்தனர்.

நீதிக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை அதற்கான நீதி கிடைக்காதது வேதனையான விடயம்.

எம்மைப் போன்ற பல இளம் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இவர் வாழ்ந்ததுடன், இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக செயலாற்றி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர்.

இவர் படுகொலை செய்யப்பட்ட பின் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது.

கிழக்கில் இருந்த ஆளுமைமிக்க தலைவர்களை, ஊடகவியலாளர்களை, கல்விமான்களை கடத்தி காணாமல் ஆக்கிவிட்டு கொலை செய்து விட்டு அச்சுறுத்தி வடக்கு கிழக்கு பிரதேச வாதம் கதைத்து என்ன பயன் கண்டீர்கள்? எவ்வாறு தலைவர்கள் உருவாகுவார்கள்? சிந்தித்து பாருங்கள்.

நாம் இங்கு இவரை பற்றி சுட்டிகாட்ட வேண்டிய விடயம் ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக தமது சமுக பணியை ஆரம்பித்த இவர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (திருமதி சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே என்பதுடன் பல மொழியறிவில் தேர்ச்சி பெற்றவர் என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற ஒரே ஒரு தலைவர்.

இது இவரின் சாணக்கிய அரசியலையும், மொழி பாண்டித்தியத்தையும் காட்டுகின்றது

குறிப்பாக படுவான்கரை பெருநிலத்தில் கடந்த 1991 ஜூண் 12ம் திகதி மகிழடித்தீவில் இடம்பெற்ற படுகொலையை சர்வதேச ரீதியாக வெளிக்காட்டியது மட்டுமன்றி அதற்கான ஒரு ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கத்தால் அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்தவரும் இவரே

இங்கு எம்மத்தியில் எழும் கேள்வி இவர் படுகொலை செய்யப்படும் அளவிற்கு என்ன தவறுசெய்தார்? தமிழ் மண்ணை நேசித்தது குற்றமா? தமிழ் மக்களை நேசித்தது குற்றமா?

இவ்வாறான மறைந்த தலைவர்களின் வரலாறுகள் தியாகங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். எமது கட்சி மாத்திரம் தான் கட்சி வளர்ச்சிக்கும், மக்கள் சேவைக்காகவும் பல தியாகங்களுக்கு அப்பால் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு மாமனிதரை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியால் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இதே நத்தார் நாளில் இருந்து நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.

எதிர்கால எமது அரசியல் இருப்புக்காகவும், நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், உயிர் நீத்தவர்களை நாம் நினைவுகூருவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

அவரை போன்று எம் மண் விடியலுக்காக உயிர்நீத்த அனைவரையும் நாம் நினைவுகூரும் போது அவர்களின் தியாத்தின் பதிவுகள் எமது இளைய சந்ததிகளுக்கு வரலாற்றை மீட்பதற்கு ஒரு வாய்பாக அமையும்” என கூறினார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், கனடா, Canada, பிரான்ஸ், France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US